"மரபுசார் கலை மற்றும் கட்டிடக்கலை பயிலரங்கம்" - இந்நிகழ்வு பழங்கால சிற்பங்கள் மற்றும் கோவில்களின் கட்டிடக்கலை அழகையும் அதன் பெருமையும் பற்றி நடத்தப்படும் நிகழ்வு. இதில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் இந்திய கோயில்கள் மற்றும் பழம்பெரும் சிற்பங்கள் பற்றி மிகவும் நுணுக்கமாக கற்றுக் கொள்வர்.இந்நிகழ்வின் இறுதியில் பங்கேற்பாளர்களை கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள சில கோவில்களுக்கு நேரடியாக அழைத்து செல்லப்படுவார்கள் இதன் மூலம் அங்கு அவர்கள் நமது பண்டைய தமிழகத்தின் கலாச்சார அழகை அறிந்து கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில் , பங்கேற்பாளர்கள் அனைவரும் திரு. ஜெகதீசன் ஐயா அவர்களிடம் மரபுசார் கலை மற்றும் கட்டிடக்கலை பற்றிய அறிவைப் பெறலாம் . அவர், நா.மகாலிங்கம் தமிழ் ஆய்வு மையத்தின் தலைவராக பணியாற்றுகிறார். அவர் பல தசாப்தங்களுக்கும் மேலாக தொல்பொருள் ஆய்வாளராக தனது வாழ்க்கையில் மிளிர்ந்தவர்.தொல்லியல், கலை கட்டிடக்கலை மற்றும் சிற்பம் போன்ற துறைகளில் வல்லமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது