மனித நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியில் வழுவாத தாக்கம் கொண்டது மொழி. உன்னத மொழியாம் நம் தமிழ்மொழியை அதன் தனித் தன்மையிலேயே அயல்மொழிக் கலப்பின்றி உரையாடல் போல் நிகழ்த்த வேண்டும். செந்தமிழும் நா பழக்கம் என்பதுபோல் தூய தமிழ்ச் சொற்களை மட்டும் பயன்படுத்தி இனிமையாய் தமிழ்ப் பேசி மகிழ்வோம் வாரீர்!