சொல்லி அடி என்பது தமிழில் விளையாடும் வார்த்தை விளையாட்டாகும். இது முழுவதுமாக தமிழ் வார்த்தைகள் அல்லது சிறு வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு விளையாடப்படும். இதில் கலந்து கொள்வதன் மூலம் தமிழ்ச் சொல்வளம் மேம்படும்.
நமது தமிழ் மன்றம் நடத்தும் இந்த நிகழ்வில் ஒரு குழுவிற்கு இரண்டு பேர் என குழுவாக இணைந்து விளையாடும் விளையாட்டு இது. மொத்தமாக இரண்டு சுற்றுகள் இடம்பெறும். இரண்டு சுற்றிலும் நான்கு சுவாரஸ்யமான போட்டிகள் நடைபெறும்.
சுற்று 1:
புதிர் விளையாட்டு (puzzle)
இப்பிரிவில் எழுத்துக்களால் நிரப்பப்பட்ட 8*8 கட்டங்கள் கணினி ஒளிவீச்சியில் போட்டியாளர்களுக்கு காண்பிக்கப்படும். ஒரு கட்டம் முப்பது நொடிகள் திரையில் காண்பிக்கப்படும். இதேபோல் தொடர்ந்து ஒன்பது கட்டங்கள் ஒளிபரப்பப்படும். அதில் இடம் பெறும் வார்த்தைகளை போட்டியாளர்கள் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் கண்டறிந்து எழுத வேண்டும்.
2. சைகையில் செய்க
இரண்டு நபர்கள் கொண்ட குழுவில் ஒருவர் நாங்கள் கொடுக்கும் வார்த்தையை சைகையில் செய்து காண்பிக்க குழுவின் மற்றொரு நபர் அந்த வார்த்தையை கண்டறிய வேண்டும்.
சுற்று – 2
புதியதாய் ஓர் புதிர்
கொடுக்கப்பட்ட அறையில் நான்கு மூலையிலும் எழுத்துகள் நிறைந்த
காகிதங்களால் நிரப்பபட்ட நான்கு அட்டை பெட்டிகள் வைக்கப்படும். போட்டியாளர்கள் திரையில் காண்பிக்கப்படும் புதிருக்கான விடையை சிதறி கிடைக்கும் எழுத்துகளை நான்கு பெட்டிகளிலும் இருந்து எடுத்து வந்து இணைக்க வேண்டும்.
எது பெருசுனு அடிச்சுக் காட்டு
இரு குழுவிலும் இருந்து ஒவ்வொரு நபரை அழைத்து நாம் தலைப்பையும் சொல்லி பொருளை ஒரு கையில் கொடுத்து நேர கணக்கீடு கருவியை
இயக்க தொடங்கிய பின் இருவரும் கையில் இருக்கும் பொருளை எண்களை கூறி கொண்டே பரிமாறி கொண்டே இருக்க வேண்டும்.
20 ஆவது வினாடியில் எந்த குழுவினரின் கையில் அப்பொருள் உள்ளதோ அக்குழுவின் மற்றொரு நபர் அவர் கூறிய எண்ணிக்கையிலான வார்த்தைகளை குறிப்பிட்ட நேரத்தில் அக்குழுவின் நபர் முழுமையாக பூர்த்தி செய்தால் மதிப்பெண் வழங்கப்படும்.
தொடர்ந்து இதைப் போல்
அடுத்தடுத்த குழுவினர் விளையாடுவர்.
இரண்டு சுற்றுகளின் மதிப்பெண்களின் அடிப்படையில்
வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.
▪︎ போட்டியாளர்கள் குழுவாக வர
வேண்டும்.
▪︎ ஒரு குழுவிற்கு இரண்டு நபர்கள் மட்டும்.
▪︎ போட்டி நடைபெறும் போது
தொலைபேசியை உபயோகிக்க கூடாது.